இஷ்ரூப் நரங்

 
விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: இந்திய வீராங்கனை இஷ்ரூப் நரங் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

கிளாஸ்கோ: கிளாஸ்​கோ​வில் நடை​பெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 78 கிலோ பிரிவு வெண்​கலப் பதக்​கத்​துக்​கான போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை இஷ்ரூப் நரங் தோல்வி கண்​டார்.

23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்​லாந்​தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. 8-வது நாள் போட்டி முடி​வில் இந்​தியா 5 தங்​கம், 12 வெள்​ளி, 6 வெண்​கலம் என மொத்​தம் 23 பதக்​கங்​களை பெற்று இருந்​தது. மீரா​பாய் சானு (பளு தூக்​குதல்), ஷர்​மிளா தன்​கர் (பாரா குண்டு எறிதல்), திலீப் கவிட் (பாரா 100 மீட்​டர் ஓட்​டம்), அஷ்மிதா டே, ஹர்ஷ் சிங் (ஜூடோ) ஆகியோர் தங்​கம் வென்​றிருந்​தனர்.

தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்​துப்​பாண்​டி, ரிஷி காந்த் சிங், ஞானேஸ்​வரி யாதவ், அஜயா பாபு, ஹர்​ஜிந்​தர் கவுர், லவ்​பிரீத்​சிங் (பளு தூக்​குதல்), சர்​வேஷ் குஷாரே (உயரம் தாண்​டு​தல்), குல்​வீர்​சிங் (10 ஆயிரம் மீட்​டர்), முரளி சங்​கர் (நீளம் தாண்​டு​தல்), முகமது பசில் (பாரா 100 மீட்​டர் ஓட்​டம்), யாமினி மவுரியா (ஜூடோ), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெள்​ளிப் பதக்​க​மும், ஜண்டு குமார் (பாரா வலுதூக்​குதல்), பிந்​தியா ராணி தேவி (பளு தூக்​குதல்), ஷில்பா ஷைலா (பாரா குண்டு எறிதல்), சீமா (வட்டு எறிதல்), தேஜஸ்​வின் சங்​கர் (டெகத்​லான்), யஷ்வீர் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோர் வெண்கல பதக்​க​மும் பெற்று இருந்தனர்.

இந்​நிலை​யில் நேற்​றைய தினம் நடை​பெற்ற 9-வது நாள் போட்டியின்​போது இந்​தி​யா​வுக்கு 8 தங்​கம் உள்பட 16 பதக்​கங்​கள் கிடைத்​தன. குத்​துச்​சண்​டை​யில் 7 தங்​க​மும், 3 வெள்​ளி​யும் கிடைத்​தது. பிரீத்தி பவார், ஜாஸ்​மின் லம்​போரி​யா, சாக்சி சவுத்​ரி, பிரியா கங்​காஸ், அருந்​ததி சவுத்​ரி, சச்​சின் சிவாச், அங்​குஷ் பங்கல் ஆகியோர் தங்​க​மும், லோவ்​லினா போர்​கோஹைன், ஜதுமணி சிங், நரேந்​தர் பெர்​வால் ஆகியோர் வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர்.

பாரா ஆடவருக்​கான குண்டு எறிதலில் (எப்​-57) சோமன் ராணா தங்​க​மும், இதே பிரி​வில் ஷுபம் ஜுயால் வெள்​ளி​யும் பெற்​றனர். ஆடவருக்​கான டிரிபிள் ஜம்ப் பந்​த​யத்​தில் தமிழக வீரர்​கள் பிரவீன் சித்​ர​வேல் வெள்​ளிப் பதக்​க​மும், செல்வ பிரபு வெண்கலமும் கைப்​பற்​றினர். மகளிர் 63 கிலோ ஜூடோ​வில் உன்னதி சர்​மா​வும், 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் குல்​வீர் சிங்​கும் வெண்​கலம் பெற்​றனர். இதனால் இந்​தியா 13 தங்​கம், 17 வெள்​ளி, 9 வெண்​கலம் என மொத்​தம் 39 பதக்​கங்​களைப் பெற்று பதக்​கப் பட்​டியலில் 4-வது இடத்​துக்கு முன்​னேறியது.

இஷ்ரூப் நரங் இந்​நிலை​யில் நேற்று கடைசி நாள் போட்​டிகள் நடை​பெற்​றன. மகளிர் 78 கிலோ பிரிவு வெண்​கலத்​துக்​கான போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை இஷ்ரூப் நரங் தோல்வி கண்டு வெளி​யேறி​னார். கனடா வீராங்கனை கோரலி காட்​பவுட் அவரை வீழ்த்தி வெண்​கலத்​தைக் கைப்​பற்​றி​னார். யஷ் கங்​காஸ் ஆடவர் +100 கிலோ பிரிவு ஜூடோ கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​திய ஜூடோ வீரர் யஷ் கங்​காஸ், வேல்ஸ் வீரர் ஜோஷிவா ஒயிட்​ஹவுஸிடம் தோல்வி கண்டு வெளி​யேறி​னார்.

அதே​போல் ஆடவர் +100 கிலோ பிரிவு கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​திய வீரர் அவ்​தார் சிங், சைப்​ரஸின் அரிஸ்​டோஸ் மைக்​கேலிடம் தோல்வி கண்​டார். சைக்​கிளிங் ஆடவர் சைக்கிளிங் ஹீட் பிரி​வில் இந்​திய வீரர் ஹர்​ஷ்வீர் செகான் 11-வது இடத்​தைப் பிடித்து இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறத் தவறி​னார்.

இதே​போல் ஆடவர் 1,000 மீட்​டர் சைக்​கிளிங் பிரி​வில் இந்​திய வீரர் ரொனால்டோ சிங் லாய்​தோன்​ஜாம் 10-வது இடத்​தைப் பிடித்து இறு​திச் சுற்று வாய்ப்பை இழந்​தார்.இதே​போல் ஆடவர் 40 கிலோமீட்​டர் பந்​த​யத்​தில்​ இந்​தி​ய வீரர்​ தினேஷ் குமார்​ முதல்​ சுற்றிலேயே தோல்​வி கண்டார்.

தேசி​யக் கொடியை ஏந்தி செல்​கிறார் ஜாஸ்​மின்

காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டி நிறைவு விழா​வின்​போது இந்​திய குத்​துச்​சண்டை வீராங்​கனை ஜாஸ்​மின் லம்​போரியா தேசி​யக் கொடியை ஏந்தி இந்​திய வீரர், வீராங்​க​னை​களை வழிநடத்​திச் செல்​வார் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மகளிர் 57 கிலோ குத்​துச்​சண்​டை​யில் ஜாஸ்​மின் தங்​கம் வென்​றிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அகம​தா​பாத்​தில் அடுத்த போட்டி: அடுத்த காமன்​வெல்த் விளையாட்​டுப் போட்டி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் வரும் 2030-ல் நடை​பெறவுள்​ளது. கிளாஸ்கோ காமன்​வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவடைவ​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​ட​வுடன் போட்​டிக்​கான கொடி, இந்​திய அதிகாரிகளிடம் ஒப்​படைக்​கப்​படும்​.

SCROLL FOR NEXT