செஷென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரை இறுதிக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.
சீனாவின் செஷென் நகரில் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப் - ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியுடன் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய சாத்விக் சிராக் ஜோடி 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கிடாம்பி தோல்வி
முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் லீ செயூக் யூவுடன் மோதினார்.இதில் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள லீ செயூக் யூ 21-16, 21-16 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரிலிருந்து கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறியுள்ளார்.