சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான மாநில செஸ் போட்டி வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சீனியர், சூப்பர் சீனியர், கல்லூரி என 3 பிரிவுகளில் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.10 லட்சம் ஆகும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெறுவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு யு-10 உலக செஸ் சாம்பியனான ஷர்வானிகா பரிசுகளை வழங்க உள்ளார். இந்த போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கு இன்று (22-ம் தேதி) கடைசி நாளாகும்.