ஸ்ரீவள்ளி பாமி​டிபதி

 
விளையாட்டு

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்​னிஸ்: ஸ்ரீவள்ளி, தியாவுக்கு வைல்டு கார்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் சாம்​பியன்​ஷிப் வரும் நவம்​பர் 2 முதல் 8–ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நடை​பெற உள்ளது.

முன்​னதாக நாளை (31-ம் தேதி) தகுதி சுற்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் தகுதிச்​சுற்​றில் பங்​கேற்க இந்​திய வீராங்​க​னைகளான ஸ்ரீவள்ளி பாமி​டிபதி, தியா ரமேஷ் ஆகியோ​ருக்கு வைல்டு கார்டு வழங்​கப்​பட்​டுள்​ளது.

உல​கத் தரவரிசையில் 640-வது இடத்​தில் உள்ள ஸ்ரீவள்ளி, முதுகுப் பகுதி​யில் ஏற்​பட்ட காயத்​தி​லிருந்து குணமடைந்து மீண்​டும் களமிறங்​கு​கிறார். கடந்த ஆண்டு சென்னை ஓபன் பிரதான சுற்​றில் 2-வது சுற்று வரை அவர், முன்​னேறி​யிருந்​தார். தமிழகத்​தைச் சேர்ந்த இளம் வீராங்​க​னையான தியா ரமேஷும் கடந்த ஓராண்​டில் குறிப்​பிடத்​தக்க அனுபவத்​தைப் பெற்​றிருந்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT