விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: கால் இறுதி சுற்றில் பார்சிலோனா தோல்வி

செய்திப்பிரிவு

மாட்ரிட்: சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்து தொடரின் 2-வது கட்ட கால் இறுதி ஆட்​டத்​தில் நேற்று அட்​லெடிகோ மாட்ரிட் - பார்சிலோனா அணி​கள் மோதின. மாட்​ரிட் நகரில் உள்ள மெட்​ரோ பொலி​டானோ மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் அட்​லெடிகோ மாட்​ரிட் மாட்ரிட் அணி 1-2 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்தது.

பார்​சிலோனா அணி சார்​பில் லேமின் யாமல் 4-வது நிமிடத்​தி​லும், ஃபெ​ரான் டோரஸ் 24-வது நிமிடத்​தி​லும் கோல் அடித்​தனர். அட்​லெடிகோ மாட்​ரிட் அணி தரப்​பில் 31-வது நிமிடத்​தில் அடெமோலா லுக்​மேன் கோல் அடித்​தனர். கடந்த வாரம் பார்​சிலோ​னா​வில் நடை​பெற்ற முதற்​கட்ட கால் இறுதி ஆட்​டத்​தில் அட்​லெடிகோ மாட்​ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றிருந்​தது.

இதனால் சராசரி கோல்வி​கிதப்​படி அட்​லெடிகோ மாட்​ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது. இங்​கிலாந்​தின் லிவர்​பூல் நகரில் உள்ள ஆன்ஃபீல்ட் மைதானத்​தில் நடை​பெற்ற மற்​றொரு 2-வது கட்ட கால் இறுதி ஆட்​டத்​தில் பாரிஸ் செயின்ட் ஜெர்​மைன் (பிஎஸ்​ஜி) அணி, லிவர்​பூல் அணியை எதிர்த்து விளை​யாடியது.

இதில் பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் உஸ்​மான் டெம்​பலே 72 மற்​றும் 90+1-வது நிமிடங்​களில் கோல் அடித்து அசத்​தி​னார். முதற்​கட்ட கால் இறுதி ஆட்​டத்​தி​லும் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றிருந்​தது.

இதன் வாயி​லாக சராசரி கோல்வி​கிதப்​படி பிஎஸ்ஜி அணி 4-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில்​ கால்​ப​தித்​தது.சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று லிவர்பூல் - பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரரான உஸ்மான் டெம்பலே அடித்த பந்து லிவர்பூல் அணியின் கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் வலையை நோக்கி பாய்கிறது.

SCROLL FOR NEXT