பாஃபோஸ்: சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார்.
இதில் பிரக்ஞானந்தா 44-வது சுற்றின் போது தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் பிரக்ஞானந்தாவின் கனவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் நபரே இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் உலக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் டி.குகேஷுடன் மோதுவார். 8 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தை 3 பேருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 8-வது சுற்றில் உக்ரைனின் அனா முசிசுக்குடன் மோதினார். இதில் திவ்யா தேஷ்முக் 85-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அனா முசிசுக்குடன் பகிர்ந்துகொண்டுள்ளார் திவ்யா தேஷ்முக்.