சுனில் கவாஸ்கர்

 
விளையாட்டு

“பாகிஸ்தான் வீரர்களை வாங்குவது...” - சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தை சாடிய கவாஸ்கர்

வேட்டையன்

மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ 2026 சீசனுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. இந்நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றில் அவர் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். “பாகிஸ்தான் வீரரை தி ஹன்ட்ரட் லீக் தொடரில் ஃப்ரான்சைஸ் அணி கொண்டுள்ள இந்திய உரிமையாளர் வாங்கியது சற்று ஆச்சரியம் தருகிறது. கடந்த 2008 நவம்பரில் மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் புறக்கணித்தனர்.

ஏலத்தில் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரருக்கு அந்த அணி நிர்வாகம் அந்த தொகையை வழங்கும். அந்த வருமானத்துக்கான வரியை அந்நாட்டுக்கு அவ்வீரர் செலுத்துவார். அதன் மூலம் அந்த அரசு ஆயுதங்களை வாங்கும். அது மறைமுகமாக இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது.

          

அந்த அணியின் பயிற்சியாளர் வெட்டோரிக்கு இந்த புரிதல் இருக்காது. ஏனெனில், அவர் நியூஸிலாந்தை சேர்ந்தவர். அவருக்கு தன் அணியில் பாகிஸ்தான் வீரர் வேண்டுமென எண்ணி இருக்கலாம். ஆனால், இந்த சூழலை அறிந்த உரிமையாளர் அதை தவிர்க்க வேண்டும். இந்தியர்களில் உயிரை விட வேறு எந்தவொரு நாடும் விளையாடாத தி ஹன்ட்ரட் தொடரில் வெற்றி பெறுவது முக்கியமா?” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சன்ரைசர்ஸ் ஃப்ரான்சைஸ் கொண்டுள்ளது. இது சன் குழும நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக், தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டிலும் இந்த ஃப்ரான்சைஸ் அணி பங்கு கொண்டுளள்து. தென் ஆப்பிரிக்காவில் சன்ரைசர்ஸ் கேப்டவுன், இங்கிலாந்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளை தனது உரிமையின் கீழ் சன்ரைசர்ஸ் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. நடப்பு தி ஹன்ட்ரட் சீசனில் பங்கேற்று விளையாடும் 8 அணிகளில் 4 அணிகளை ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த அணிகள் ஏலத்தில் பங்கேற்றன. அதில்தான் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்தது. பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் ஒப்பந்தம் செய்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT