விளையாட்டு

பெங்கால் டைகர்ஸ் அணியிடம் வீழ்ந்தது தமிழ்நாடு டிராகன்ஸ்

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் ஜக்ராஜ் சிங் 3 கோல்கள் (11, 43 மற்றும் 45-வது நிமிடங்கள் அடித்து அசத்தினார். சுக்ஜித்சிங் (18-வது நிமிடம்), அபிஷேக் (55- வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தரப்பில் அட்ரோஹிட் எக்கா (36-வது நிமிடம்), தாமஸ் சோர்ஸ்பை (48-வது நிமிடம்), பிளேக் கோவர்ஸ் (51-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு டிராகன்ஸ் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை பெற்றுள்ளது. முதல் 3 ஆட்டங்களில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் தனது அடுத்த ஆட்டத்தில் கலிங்கா லான்சர்சை வரும் 18-ம் தேதி எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT