டாக்கா: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கடந்த 20-ம் தேதி டாக்காவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது வங்கதேச அணி பந்துவீசு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக களநடுவர்கள் புகார் தெரிவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்களை வங்கதேச அணி குறைவாக வீசியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த வங்கதேச அணி வீரர்களுக்கும் போட்டியின் ஊதியத்தில் 10 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.