விளையாட்டு

சையது முஸ்டாக் அலி டி20 தொடர்: ஆயுஷ் மாத்ரே விளாசலில் மும்பை வெற்றி

செய்திப்பிரிவு

லக்னோ: சையது முஸ்​டாக் அலி டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று லக்​னோ​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை - விதர்பா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 192 ரன்​கள் குவித்​தது. அதர்வா டைட் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 64 ரன்​களும், அமன் மோஹதே 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 61ரன்​களும் விளாசினர்.

192 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி 17.5 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 194 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஆயுஷ் மாத்ரே 53 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​களும், ஷிவம் துபே 19 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​களும் விளாசினர். சூர்​யகு​மார் யாதவ் 30 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 35 ரன்​கள் சேர்த்​தார்.

தமிழக அணி தோல்வி: அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தமிழகத்தை வீழ்த்​தி​யது. முதலில் பேட் செய்த தமிழக அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 198 ரன்​கள் குவித்​தது. துஷார் ரஹேஜா 41 பந்​துகளில், 72 ரன்​களும், அமித் சாத்விக் 40 பந்​துகளில், 54 ரன்களும் சேர்த்தனர்.

199 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யாஷ் துல் 71, ஆயுஷ் பதோனி 41, நிதிஷ் ராணா 34, பிரியன்ஷ் ஆர்யா 35 ரன்கள் சேர்த்தனர்.

SCROLL FOR NEXT