சை​யத் மோடி பாட்​மிண்​டன்: உன்ன​தி, கிடாம்பி வெற்றி!

சை​யத் மோடி பாட்​மிண்​டன்: உன்ன​தி, கிடாம்பி வெற்றி!
Updated on
1 min read

லக்னோ: சையத் மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா, தன்வி சர்​மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.

உத்​தரபிரதேசத்​தின் லக்​னோ​வில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் கால் இறு​திப் போட்​டி​யில் தன்வி சர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்​கில் ஹாங்​காங் வீராங்​கனை லோ சின் யான் ஹாப்​பியை வீழ்த்​தி​னார். மற்​றொரு கால் இறு​தி​யில் இந்​திய வீராங்​கனை உன்​னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற கணக்​கில் சக நாட்​டைச் சேர்ந்த ரக்​சிதா சந்​தோஷை சாய்த்​தார்.

ஆடவர் கால் இறு​திப் போட்​டி​யில் இந்​திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். கால் இறு​திப் போட்​டி​யில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 11-4 என்ற கணக்​கில் சக நாட்டு வீரர் பிரி​யான்ஷு ரஜாவத்தை வீழ்த்​தி​னார். அரை இறு​தி​யில் அவர் மிதுன் மஞ்​சு​நாத்​தை எதிர்த்​து விளை​யாடவுள்ளார்.

சை​யத் மோடி பாட்​மிண்​டன்: உன்ன​தி, கிடாம்பி வெற்றி!
மாமல்லபுரத்தில் இன்று யு-20 மகளிர் கால்பந்து போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in