விளையாட்டு

சிட்னி டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - தொடரைக் கைப்பற்றியது ஆஸி. அணி!

செய்திப்பிரிவு

சிட்னி: சிட்னி டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் இங்​கிலாந்தை வீழ்த்​தி​யது. இதையடுத்து ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி கைப்​பற்​றியது. தொடர்​நாயகன் விருதை மிட்​செல் ஸ்டார்க் கைப்​பற்​றி​னார்.

இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்​தது. 4 போட்​டிகள் முடிந்த நிலை​யில் ஆஸ்​திரேலியா 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.இந்​நிலை​யில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்​தில் கடந்த 4-ம் தேதி தொடங்​கியது.

முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து 384 ரன்​களும், ஆஸ்​திரேலியா 567 ரன்​களும் குவித்​தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 8 விக்​கெட் இழப்​புக்கு 302 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற கடைசி நாள் ஆட்​டத்தை ஜேக்​கப் பெத்​தேல் 142 ரன்​களு​ட​னும், மேத்யூ பாட்ஸ் 0 ரன்​களு​ட​னும் தொடங்​கினர்.

மேலும் 12 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜேக்​கப் பெத்​தேல் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். 265 பந்​துகளில் 15 பவுண்​டரி​களு​டன் 154 ரன்​கள் சேர்த்​தார் பெத்​தேல். இதையடுத்து விளை​யாட வந்த ஜோஷ் டங் 6 ரன்​களில் ஸ்டார்க் பந்​தில் அவுட்​டா​னார். 88.2 ஓவர்​களில் 342 ரன்​களுக்கு இங்​கிலாந்​தின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​தது. மேத்யூ பாட்ஸ் 18 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் ஸ்டார்க், பியூ வெப்​ஸ்​டர் 3, போலண்ட் 2, மைக்​கேல் நேசர் ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர். இதையடுத்து 160 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் ஆஸ்​திரேலிய அணி 2-வது இன்​னிங்ஸை தொடங்​கியது.தொடக்க ஆட்​டக்​காரர்​கள் டிரா​விஸ் ஹெட் 29, ஜேக் வெத​ரால்டு 34 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். மார்​னஸ் லபுஷேன் 37 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன்​-அவுட்​டா​னார்.

கேப்​டன் ஸ்மித் 12 ரன்​களும், உஸ்​மான் கவாஜா 6 ரன்​களும் எடுத்து வீழ்ந்​தனர். இதனால் 5 விக்​கெட் இழப்​பு​க்கு 121 ரன்​கள் என்ற நிலை​யில் ஆஸ்​திரேலிய அணி இருந்​தது. இருந்​த​போதும், 6-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி​யும், கேமரூன் கிரீனும் நிதான​மாக விளை​யாடி அணியை வெற்​றிக்கு அழைத்​துச் சென்​றனர்.

31.2 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்து ஆஸ்​திரேலிய அணி வெற்றி கண்​டது. கேரி 16 ரன்​களும், கிரீன் 22 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஜோஷ் டங் 3 விக்​கெட்​களை​யும், வில் ஜேக்ஸ் ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். இந்த வெற்​றி​யின் மூலம் ஆஷஸ் தொடரை ஆஸ்​திரேலிய அணி 4-1 என்ற கணக்​கில் கைப்​பற்றி சாதனை படைத்​துள்​ளது. ஆட்​ட​நாயக​னாக டிரா​விஸ் ஹெட்​டும், தொடர்​நாயக​னாக மிட்​செல் ஸ்டார்க்​கும்​ தேர்​வு செய்​யப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT