இலங்கையில் ஐசிசி போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேச கோரிக்கை நிராகரிப்பு

இலங்கையில் ஐசிசி போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேச கோரிக்கை நிராகரிப்பு
Updated on
1 min read

துபாய்: இலங்கை​யில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிகளை நடத்த வேண்​டும் என்ற வங்​கதேசத்​தின் கோரிக்கையை சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) நிராகரித்துள்ளது.

வங்​கதேசத்​தில் நடை​பெற்ற இந்​துக்​கள் மீதான தாக்​குதல் சம்​பவம் கிரிக்​கெட்​டிலும் எதிரொலித்து வரு​கிறது. தாக்​குதல் சம்​பவத்​தால் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசே​னா, இந்து அமைப்​பினர் கோரிக்கை விடுத்​தனர்.

இதையடுத்து அவர் கேகேஆர் அணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், இதற்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில் இந்​தி​யா​வில் நடை​பெறும் டி20 உலகக் கோப்​பை​யில் விளை​யாட வங்​கதேசம் மறுத்​து​விட்​டது.

பாது​காப்பு கருதி தங்​கள் அணி மோதும் ஆட்​டங்​களை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என்று ஐசிசி-​யிடம் வலி​யுறுத்​தி​யுள்​ளது. ஆனால், வங்​கதேசத்​தின் இந்தக் கோரிக்​கையை ஐசிசி நிராகரித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது

மேலும், ஐசிசி டி20 உலகக்​கோப்பை போட்​டிகளை இந்​தி​யா​வில்​தான் வங்​கதேச அணி விளை​யாட வேண்​டும். இல்​லை​யென்​றால் அந்த அணி புள்​ளி​களை இழக்க நேரிடும் என்று வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்தை ஐசிசி எச்​சரித்​த​தாக தெரி​கிறது. ஐசிசி சார்​பில், வங்​கதேச கிரிக்​கெட் வாரிய நிர்​வாகி​களு​டன் காணொலி மூலம் இந்த உத்தரவை ஐசிசி நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஆனால், அதே​நேரத்​தில் ஐசிசி-​யிடம் இருந்து தங்​களுக்கு எந்​த​வித​மான இறுதி எச்​சரிக்​கை​யும் இது​வரை வரவில்லை என்று வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் தெரி​வித்து உள்​ளது. அடுத்த மாதம் நடை​பெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் 20 நாடு​கள் பங்​கேற்​கின்​றன.

வங்​கதேசம் ‘சி’ பிரி​வில் இடம்​பெற்​றுள்​ளது. அந்த அணி மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் பிப்​ர​வரி 7-ம் தேதி​யும், இத்​தாலி​யுடன் 9-ம் தேதி​யும், இங்​கிலாந்​துடன் 14-ம் தேதி​யும், நேபாளத்​துடன் 17-ம் தேதி​யும் மோதுகிறது. கொல்​கத்​தா, மும்​பை​யில்​ இந்​த ஆட்​டங்​கள்​ நடை​பெறுகின்​றன.

இலங்கையில் ஐசிசி போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேச கோரிக்கை நிராகரிப்பு
முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரம்: கிரிக்கெட்டையும் அரசியலையும் கலக்க வேண்டாம் - பாஜக-வுக்குக் கூட்டணி கட்சிகள் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in