விளையாட்டு

இங்கிலாந்துக்கு 435 ரன்கள் இலக்கு: அடிலெய்​டில் ஆஸி. ஆதிக்கம் - ஆஷஸ் டெஸ்ட் தொடர்

செய்திப்பிரிவு

அடிலெய்டு: அடிலெய்​டில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 371 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக அலெக்ஸ் கேரி 109, உஸ்​மான் கவாஜா 82, மிட்​செல் ஸ்டார்க் 54 ரன்​கள் சேர்த்​தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

இதையடுத்து பேட் செய்த இங்​கிலாந்து அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 68 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 213 ரன்​கள் எடுத்​தது. பென் ஸ்டோக்ஸ் 45 ரன்​களும், ஜோப்ரா ஆர்ச்​சர் 30 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இங்​கிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது.

பென் ஸ்டோக்​ஸ், ஜோப்ரா ஆர்ச்​சர் ஜோடி போராடி ரன்​கள் சேர்த்​தது. சிறப்​பாக விளை​யாடி வந்த பென் ஸ்டோக்ஸ் தனது 37-வது அரை சதத்தை கடந்​தார். 9-வது விக்​கெட்​டுக்கு 106 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை மிட்​செல் ஸ்டார்க் பிரித்​தார். பென் ஸ்டோக்ஸ் 198 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 83 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் போல்​டா​னார்.

தனது முதல் அரை சதத்தை விளாசிய ஜோப்ரா ஆர்ச்​சர் 105 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​கள் எடுத்த நிலை​யில ஸ்காட் போலண்ட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். முடி​வில் இங்​கிலாந்து அணி 87.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜோஷ் டங் 7 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் பாட் கம்​மின்​ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். நேதன் 2 விக்​கெட்​களை​யும், மிட்​செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். 85 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 66 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் எடுத்​தது.

அதிரடி​யாக விளை​யாடிய தொடக்க வீர​ரான டிரா​விஸ் ஹெட் தனது 11-வது சதத்தை விளாசி​னார். மட்​டையை சுழற்​றிய அவர், 196 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 142 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய அலெக்ஸ் கேரி 91 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் சேர்த்து களத்​தில் இருந்​தார். இந்த ஜோடி 5-வது விக்​கெட்​டுக்கு 122 ரன்​கள் சேர்த்​துள்​ளது.

முன்​ன​தாக ஜேக் வெத​ரால்டு 1, மார்​னஷ் லபுஷேன் 13, உஸ்​மான் கவாஜா 40, கேமரூன் கிரீன் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். இங்​கிலாந்து அணி சார்​பில் ஜோஷ் டங் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிரைடன் கார்​ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 356 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள ஆஸ்​திரேலிய அணி கைவசம் 6 விக்​கெட்​கள் மீதம் உள்ள நிலை​யில் இன்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்தது.

ஹெட் 170, கேரி 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் இங்கிலிஸ், கம்மின்ஸ், லயன், போலண்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 349 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. டக்கெட் மற்றும் போப் ஆட்டமிழந்தனர்.

99 ரன்னில் தப்பித்த ஹெட்: டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் இருந்த போது ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கொடுத்த கேட்ச்சை கல்லி திசையில் இருந்த ஹாரி புரூக் தவறவிட்டார். இந்த வாய்ப்பை டிராவிஸ் ஹெட் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

SCROLL FOR NEXT