விளையாட்டு

டிச.7 முதல் ஆஸி. சார்​பில் திருவிழா

செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்திரேலியாவை வர்த்​தகம் மற்​றும் முதலீட்​டுக்​கான நம்​பக​மான கூட்​டாளியாகவும், கல்வி மற்​றும் சுற்​றுலா​வுக்​கான முன்​னணி நாடாகவும் இந்​தி​யர்​களிடம் அறி​முகப்​படுத்​தும் நோக்​கில், ஜி டே நமஸ்தே என்ற பெயரில் ஒரு வார காலத் திருவிழாவை ஆஸ்திரேலியா நடத்து​கிறது.

இந்​தத் திரு​விழா டிசம்​பர் 7 முதல் 12-ம் தேதி வரை இந்​தி​யாவின் 6 நகரங்​களில் நடை​பெற உள்​ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்​களூரு, கொல்​கத்தா, நாகாலாந்​தின் கோஹிமா ஆகிய நகரங்​களில் பல்​வேறு நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன. இதன் நிறைவாக டிசம்​பர் 12-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் பிக்​பாஷ் டி 20 தொடரின் முதல் போட்டி நடை​பெறுகிறது. இதில் மெல்​பர்ன் ரெனிகேட்ஸ் - பெர்த் ஸ்​கார்ச்​சர்ஸ் அணிகள் மோதுகின்​றன.

இது​தொடர்​பான அறி​விப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா​வுக்​கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன், துணைத் தூதர் சிலாய் ஜாகி, தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க தலை​வர் ஸ்ரீனிவாச ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT