விளையாட்டு

முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி

செய்திப்பிரிவு

லாகூர்: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்வதேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 22 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. இந்​தப் போட்டி நேற்று லாகூரிலுள்ள கடாபி மைதானத்தில் நடை​பெற்​றது.

முதலில் பேட்​டிங் செய்த பாகிஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 168 ரன்​கள் சேர்த்​தது. சயீம் அயூப் 40, பாபர் அஸம் 24, கேப்​டன் சல்​மான் அலி ஆகா 39, உஸ்​மான் கான் 18, முகமது நவாஸ் 15 ரன்​கள் சேர்த்​தனர். இதைத் தொடர்ந்து 169 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 146 ரன்​கள் மட்​டுமே எடுத்து தோல்வி கண்​டது.

ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் டிரா​விஸ் ஹெட் 23, கேமரூன் கிரீன் 36, சேவியர் பார்ட்​லெட் 34ரன்​கள் சேர்த்​தனர். இதனால் 22 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது. இவ்​விரு அணி​களுக்கு இடையிலா 2-வது டி20 போட்டி லாகூர் மைதானத்​தில்​ நாளை (ஜனவரி 31) நடைபெறவுள்​ளது.

          
SCROLL FOR NEXT