நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை - கேன்டீன் உரிமையாளர், மாஸ்டர் உட்பட 3 பேர் கைது

சென்னையில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்
நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை - கேன்டீன் உரிமையாளர், மாஸ்டர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: நந்தனம் அரசு கல்​லூரி​யில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்​டது தொடர்​பாக கல்​லூரி கேன்​டீன் உரிமை​யாளர், மாஸ்​டர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்​லூரி​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். இந்த கல்லூரி வளாகத்​தில் கேன்​டீனும் செயல்​பட்டு வரு​கிறது. இதை முத்​துச்​செல்​வம் (48) என்​பவர் நடத்தி வரு​கிறார். இந்த கேன்​டீனில் 22 வயதுடைய இளம் பெண் ஒரு​வர், அண்​மை​யில் வேலைக்கு அமர்த்​தப்​பட்​டார். மேலும் அந்த பெண் அங்​கேயே தங்​கி​யும் இருந்தார்.

இந்த பெண்​ணின் ஏழ்மை நிலையை பயன்​படுத்தி கேன்​டீன் உரிமை​யாளர் முத்​துச்​செல்​வம், கேன்​டீன் மாஸ்​டர் குணசேகரன் (38) இவர்​களது நண்​பர் கார்த்​தி​கேயன் (56) ஆகியோர் அந்த பெண்ணை மிரட்​டி​யும், கட்​டாயப்​படுத்​தி​யும் அடிக்​கடி கேன்​டீன், கல்​லூரி வளாகத்​தில் உள்ள அறை ஆகிய​வற்​றில் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து அந்த பெண் கல்​லூரி காவலா​ளி​யிடம் கண்​ணீருடன் முறை​யிட்​டுள்​ளார். இதையடுத்து சைதாப்​பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி போலீ​ஸார் பாலியல் வன்​கொடுமை உட்பட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து முத்​துச்​செல்​வம், குணசேகரன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த வழக்​கில் மேலும் 2 பேரை தேடி வரு​கின்​றனர். பாதிப்​புக்கு உள்​ளான பெண்​ணுக்கு தேவை​யான மருத்​துவ சிகிச்சை மற்​றும் மன நல ஆலோ​சனை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகை​யில், “பா​திப்​புக்​குள்​ளான பெண் அரியலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர். இளம் வயதிலேயே திருமண​மான இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரு​கிறார். கேன்டீன் உரிமை​யாளர் முத்​துச்​செல்​வம் கும்​பகோணத்​தில் தனக்கு தெரிந்​தவர் மூலம் அந்த பெண்ணை ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு சென்​னைக்கு 20 நாட்​களுக்கு முன் அழைத்து வந்து பணி​யமர்த்​தி​யுள்​ளார்.

பணிக்​குச் சேர்ந்த நாள் முதல் எல்லை மீற ஆரம்​பித்​துள்​ளார். பின்னர் நண்​பரை​யும் அழைத்​து, அவர்​களும் எல்லை மீறி​யுள்​ளனர். முத்​துச்​செல்​வம் கல்​லூரி​யுட​னான நேரடி ஒப்​பந்​தத்​தின் மூலம் கேன்​டீனை கடந்த 12 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறார்.

எனவே இவர் இது​போல் வேறு யாரிட​மாவது அத்​து​மீறலில் ஈடுபட்டாரா என விசா​ரணை நடத்தி வரு​கிறோம்” என்​றனர். கல்லூரி வளாகத்​திலேயே இளம் பெண் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் சென்​னை​யில்​ அதிர்​வலைகளை ஏற்படுத்தியுள்​ளது.

நந்தனம் அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை - கேன்டீன் உரிமையாளர், மாஸ்டர் உட்பட 3 பேர் கைது
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in