விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

செய்திப்பிரிவு

பெர்த்: இங்​கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்திரேலிய அணி.

பெர்த் நகரில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி, அறி​முக வீரரான மஹ்லி பியர்ட்​மேனின் வேகப்​பந்து வீச்சை தாக்​குப்​பி​டிக்க முடி​யாமல் 33.4 ஓவர்​களில் 131 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கஸ் அட்​கின்​சன் 32 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

டாம் பேன்​டன் 25, வில் ஜேக்ஸ் 25, ஜோ ரூட் 17, பென் டக்​கெட் 9, கேப்​டன் ஹாரி புரூக் 1, ஜோர்​டான் காக்ஸ் 2, சேம் கரண் 0, லியாம் டாவ்​சன் 0, ஜேமி ஓவர்​டன் 4, ஜோப்ரா ஆர்ச்​சர் 11 ரன்​களில் நடையை கட்​டினர். ஆஸ்திரேலிய அணி தரப்​பில் மஹ்லி பியர்ட்​மேன் 7.4 ஓவர்​களை வீசி ஒரு மெய்​டனுடன், 24 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார்.

ஸ்​பென்​சன் ஜான்​சன் 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினார். இதையடுத்து 132 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 30 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் விளாசினார். கூப்​பர் கானொலி 27, ஜோஷ் இங்​லிஷ் 23, மேட் ரென்ஷா 26 ரன்​கள் சேர்த்​தனர்.

7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் போட்​டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் நாளை (15-ம் தேதி) அடிலெய்​டில் நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT