மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் ஆட்டங்கள் லாகூரில் வரும் 29, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் எலிஸ் ஆகிய 5 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது. அதேவேளையில் இளம் வீரர்களான சீன் அபோட், பென்டுவார்ஷுயிஸ், மஹ்லி பியர்ட்மேன், ஜேக் எட்வர்ட்ஸ், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேட் ரென்ஷா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்ச் ஓவன், மஹ்லி பியர்ட்மேன், கூப்பர் கானொலி, ஜாக் எட்வர்ட்ஸ், மேத்யூ குனேமன், ஜோஷ் பிலிப், பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், சீன் அபோட், ஆடம் ஜாம்பா.