டி 20 உலகக் கோப்பை விவகாரம்: வங்கதேசத்துக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை

நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் மாற்று அணி
டி 20 உலகக் கோப்பை விவகாரம்: வங்கதேசத்துக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை
Updated on
2 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நடை​பெறும் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்​கேற்​பது குறித்து நாளைக்​குள் (ஜனவரி 21) வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் முடிவு எடுக்க வேண்​டும் இல்​லை​யென்​றால் வேறு அணி சேர்க்​கப்​படும் என சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்றுள்​ளது. இதே பிரி​வில் இங்​கிலாந்​து, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், இத்​தாலி, நேபாளம் அணி​களும் இடம் பெற்றுள்ளன. வங்​கதேச அணி பங்​கேற்​கும் லீக் ஆட்டங்கள் கொல்​கத்​தா, மும்​பை​யில் நடை​பெறுகிறது.

இதற்​கிடையே வங்​கதேசத்​தில் இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதனால் கடந்த ஆண்டு இந்​திய அணி​யின் வங்​கதேச சுற்​றுப்​பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வங்​கதேச மகளிர் அணியின் இந்​திய வரு​கை​யும் ரத்து செய்​யப்​பட்​டது. இந்நிலை​யில் ஐபிஎல் ஏலத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்​கதேச வேகப்​பந்து வீச்​சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்​மானை வாங்​கி​யிருந்​தது.

ஆனால் பிசிசிஐ-​யின் அறி​வுறுத்​தல் காரண​மாக அவரை, கொல்​கத்தா அணி விடு​வித்​தது. இதற்கு வங்​கதேச கிரிக்கெட் வாரி​யம் எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்து இந்தியா​வில் தங்​களது அணிக்கு பாது​காப்பு இருக்​காது அதனால் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்தேசம் விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என ஐசிசி-​யிடம் கோரிக்கை வைத்​தது.

ஆனால் வங்​கதேசத்​தின் குற்​றச்​சாட்டு மீது எந்​தவித உண்மை​யும் இல்​லை. வங்​கதேச அணிக்கு இந்​தி​யா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்​சுறுத்​தலும் இல்லை என ஐசிசி தெரி​வித்​தது. இதையடுத்து 2 பேர் அடங்​கிய ஐசிசி குழு கடந்த சனிக்​கிழமை டாக்கா சென்று வங்​கதேச கிரிக்கெட் வாரிய அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி​யது. அப்​போதும் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் தனது முடி​வில் விடாப்​பிடி​யாக இருந்​தது.

டி 20 உலகக் கோப்​பை​யில் விளை​யாடு​வதற்​காக இந்​தியா செல்​ல​மாட்​டோம். எங்​கள் அணி பங்​கேற்​கும் ஆட்டங்களை இலங்​கை​யில் நடத்த வேண்​டும். அதற்கு தகுந்​த​படி தங்​கள் அணி இடம் பெற்​றுள்ள குரூப்பை மாற்ற வேண்​டும் என கூறியது. அதாவது தற்​போது ‘சி’ பிரிவில் உள்ள வங்​கதேச அணியை ‘பி’ பிரிவுக்கு மாற்ற வேண்​டும் எனவும் கூறியது.

‘பி’ பிரி​வில் இலங்​கை, ஆஸ்​திரேலி​யா, அயர்​லாந்​து, ஓமன், ஜிம்​பாப்வே அணி​கள் உள்​ளன. இதில் அயர்​லாந்​துக்கு பதிலாக தங்​களது அணியை இடம் பெறச் செய்​தால் அனைத்து ஆட்​டங்​களையும் இலங்​கை​யிலேயே நடத்த முடி​யும் எனவும் ஆலோ​சனையை முன் வைத்​தது. ஆனால் ஐசிசி தரப்​பில் போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களே உள்​ளதால் அட்​ட​வணை, பயண விவரங்​களை மாற்ற முடியாது என தெரிவிக்​கப்​பட்​டது.

மேலும் வரும் 21-ம் தேதிக்​குள் (நாளை) டி 20 உலகக் கோப்பை​யில் பங்​கேற்​பது குறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்​டும் என ஐசிசி தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. அன்​றைய தினத்​துக்​குள் முடிவு செய்​யா​விட்​டால் வங்​கதேச அணிக்கு பதிலாக வேறு அணி டி 20 உலகக் கோப்​பை​யில் சேர்க்​கக் கூடும் எனவும் ஐசிசி தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. ஒரு​வேளை டி 20 உலகக் கோப்​பை​யில் வங்​கதேச அணி பங்​கேற்​கா​விட்​டால் அந்த அணிக்கு மாற்றாக தகுதிச் சுற்​றில் பங்​கேற்ற அணி​களில் சிறந்​த தரவரிசை​யில்​ உள்​ள ஸ்காட்​லாந்​து அணி விளையாடக்கூடும்.

டி 20 உலகக் கோப்பை விவகாரம்: வங்கதேசத்துக்கு ஐசிசி கடும் எச்சரிக்கை
விஜய்யை மிரட்டும் பாஜக: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in