விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 4 இந்​திய வீராங்கனை​கள் தங்​கம் வென்று அசத்தல்

செய்திப்பிரிவு

உலான்​பாதர்: மங்​கோலி​யா​வின் உலான்​பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடை​பெற்று வருகிறது. இதில் மகளிருக்​கான 48 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்​கில் மங்​கோலி​யா​வின் நோமுந்​தரி என்க்​-அம்கலனை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

54 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்​கில் டோக்​கியோ ஒலிம்பிக்கில் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்த சீன தைபே​வின் ஹுவாங் ஹியாவோ வெனை தோற்​கடித்து தங்​கம் வென்​றார். 60 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் பிரியா கங்​காஸ் 3-0 என்ற கணக்​கில் வட கொரி​யா​வின் வான் உன் ஜியோங்கை வீழ்த்தி தங்​கம் வென்​றார்.

          

அதே வேளை​யில் 70 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் அருந்​ததி சவுத்ரி 4-1 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் பாகித் சீடிஷை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.அதேவேளை​யில் 57 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜெய்​ஸ்​மின் லம்​போரியா 0-5 என்ற கணக்​கில் தாய்​லாந்​தின் புன்​ராவீ ரூன்​ரோஸிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

இதே​போன்று 80+ கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் அல்ஃபியா பதான் 0-5 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் தீனா இஸ்லாம்பெகோவாவிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT