விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்தியாவில் நடத்த திட்டம்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: பிக் பாஷ் டி20 தொடரின் தொடக்க ஆட்​டத்தை வரும் டிசம்​பர் மாதம் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடத்த ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் ஏற்கெனவே முடிவு செய்​துள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக வருங்​காலத்​தில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் ஆட்​டத்​தை​யும் இந்​தி​யா​வில் நடத்​து​வது குறித்து ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் பரிசீலித்து வரு​கிறது.

இதுதொடர்​பாக ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலைமை செயல் அதி​காரி டாட் கிரீன்​பெர்க் கூறும்​போது, “குறிப்​பிட்ட சில பகு​தி​களில் கூடு​தல் கிரிக்​கெட் போட்​டிகளை நடத்​து​வதற்​கான வாய்ப்​பு​கள் இந்​தி​யா​வில் தெளி​வாக உள்​ளன.

இதுதொடர்​பாக நாங்​கள் தற்​போது திட்​ட​மிட​வில்​லை. ஆனால் எதிர்​காலத்​தில் கண்​டிப்​பாகப் பரிசீலிக்​கப்​படக்​கூடிய ஒரு விஷயமே. எங்​களுக்கு இங்​கிலாந்து மற்​றும் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெறும் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வலு​வாகவே உள்​ளது.

உலக கிரிக்​கெட் அரங்​கில் உள்ள சவால் என்​னவென்​றால் கால அட்​ட​வணை​யில் 365 நாட்​கள் மட்​டுமே உள்​ளன. நாங்​கள் விரும்​பும் போட்​டிகளை நடத்த வேண்​டு​மா​னால், கூடு​தலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்​கள்​ தேவைப்​படும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT