செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணிகள் அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணிகள் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஃபிடே செஸ் ஒலிம்​பி​யாட் போட்டி வரும் செப்​டம்​பர் 16 முதல் 27 வரை உஸ்​பெகிஸ்​தானில் உள்ள சமர்​கண்​டில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான இந்​திய ஆடவர், மகளிர் அணி​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

இரு பிரி​விலும் இந்​தியா நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கு​கிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற செஸ் ஒலிம்​பி​யாட்​டில் இந்​திய அணி​கள் சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தன.

இம்​முறை ஆடவர் அணி​யில் உலக சாம்​பிய​னான டி.கு​கேஷுடன், சமீபத்​தில் நார்வே செஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்த ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, நிஹால் சரின், விதித் குஜ​ராத்தி ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் நிஹால் சரின் மட்​டுமே புதி​தாக இணைந்​துள்​ளார்.

மகளிர் அணி​யில் ஹோனேரு ஹம்​பி, கேண்​டிடேட்ஸ் தொடரின் வெற்​றி​யாள​ரான ஆர்​.வைஷாலி, உலக கோப்பை வெற்​றி​யாளர் திவ்யா தேஷ்​முக், வந்​திகா அகர்​வால், சவிதா ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 2024-ல் சாம்​பியன் பட்​டம் வென்ற அணி​யில் ஹோனேரு ஹம்​பி, சவி​தா ஆகியோர்​ இடம்​ பெற்றிருக்கவில்லை.

செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய அணிகள் அறிவிப்பு
கோலாகலமாக தொடங்கியது கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: நீச்சலில் ஸ்ரீஹரி நடராஜ் அரை இறுதிக்கு முன்னேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in