விளையாட்டு

ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு

செய்திப்பிரிவு

லண்டன்: 2027-ம் ஆண்டுக்கான ஆட​வர் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்​கான அட்​ட​வணையை இங்​கிலாந்து கிரிக்கெட் வாரி​யம் நேற்று வெளி​யிட்​டது. இதன்​படி முதல் போட்டி​யில் இங்​கிலாந்து - ஆஸ்​திரேலியா அணி​கள் 2027-ம் ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நாட்​டிங்​காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்​தில் மோதுகின்​றன.

2-வது டெஸ்ட் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை லார்ட்ஸ் மைதானத்தி​லும், 3-வது டெஸ்ட் பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்பாஸ்டன் மைதானத்​தில் ஜூலை 8 முதல் 12 வரை​யும், 4-வது டெஸ்ட் ஜூலை 21 முதல் 25 வரை சவுத்​தாம்​டனிலும், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை தி ஓவல் மைதானத்​தி​லும் நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT