வெட்ஸ்லார்: ஜெர்மனியின் வெட்ஸ்லார் நகரில் உலக தடகள கான்டினென்டல் டூர் சாலஞசர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் 100 மீட்டர் ஓட்டத்தில் 10.14 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடம் பிடித்தார்.
இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் 100 மீட்டர் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 23 வயதாகும் அனிமேஷ் குஜூரின் சிறந்த செயல் திறனாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் அவர், இந்த தொடக்கான தகுதிச் சுற்றில் பந்தய தூரத்தை 10.19 விநாடிகளில் கடந்திருந்தார். இந்த செயல் திறனை தற்போது அவர், மேம்படுத்தியுள்ளார்.