விளையாட்டு

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கழகம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நாளை (21-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்குகிறது.

வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி, திருவனந்தபுரம் காவல்துறை, பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடா, சென்னை வருமானவரித்துறை, கேரள மாநில மின்சார வாரியம், சென்னை ஐஓபி, சென்னை ஐசிஎப், சென்னை ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. மகளிர் பிரிவில் ஹைதராபாத் தென் மத்திய ரயில்வே, சென்னை தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கம், கேரள மின் வாரியம், மும்பை மத்திய ரயில்வே விளையாட்டு சங்கம், சென்னை எஸ்டிஏடி எலைட் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட உள்ளன. ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு கிடைக்கும்.மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT