விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி: அலெக்சாண்டர் ஜிவேரேவ் - பென் ஷெல்டன் மோதல்

செய்திப்பிரிவு

நியூ​யார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் இறு​திச் சுற்​றில் ஜெர்​மனி​யின் அலெக்​சாண்​டர் ஜிவேரே​வும், அமெரிக்​கா​வின் பென் ஷெல்​ட​னும் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளனர்.

அமெரிக்க ஓபன் டென்​னிஸ் போட்டி நியூ​யார்க்​கிலுள்ள ஆர்​தர் ஆஷ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் அரை இறு​திப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் சக நாட்டு வீர​ரான பிரான்​சஸ் டியா​போவுடன் மோதி​னார்.

இதில் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் உள்ள ஷெல்​டன் 4-6, 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் தரவரிசை​யில் 11-வது இடத்​தி​லுள்ள டியா​போவை வீழ்த்தி இறு​திச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்​களில் இந்த ஆட்​டம் முடிவுக்கு வந்​தது.

2003-ம் ஆண்​டில் அமெரிக்க வீரர் ஆன்டி ராடிக் அமெரிக்க ஓபன் கிராண்ட்​ஸ்​லாமில் பட்​டம் வென்​றிருந்​தார். இந்​நிலை​யில் இந்த போட்​டி​யில் பென் ஷெல்​டன் பட்​டம் வென்​றால், ஆன்டி ராடிக்​குக்​குப் பிறகு அமெரிக்க ஓபனில் சாம்​பியன் பட்​டம் வென்​றவர் என்ற பெரு​மையை பென் ஷெல்​டன் பெறு​வார்.

மற்​றொரு அரை இறு​தி​யில் தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்ள அலெக்​சாண்​டர் ஜிவேரேவுடன், ரஷ்​யா​வின் கரன் கச்​சநோவ் மோதி​னார். இதில் ஜிவேரேவ் 6-3, 7-6(9), 7-6 (8) என்ற செட் கணக்​கில் கரன் கச்​சநோவை போராடி வீழ்த்தி இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

2020-ம் ஆண்​டுக்​குப் பிறகு அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முதன்​முறை​யாக அமெரிக்க ஓபன் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார். அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் இந்த ஆண்டு நடை​பெற்ற பிரெஞ்சு ஓபனில் பட்​டம் வென்​றிருந்​தார்.

இந்த அமெரிக்க ஓபன் போட்​டி​யில் பட்​டம் வென்​றால் இது அவருக்கு 2-வது கிராண்ட்​ஸ்​லாம் பட்​ட​மாக அமை​யும். மேலும், முதலா​வது அமெரிக்க ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் பட்​ட​மாக​வும் இது அமை​யும். கடந்த 2020-ம் ஆண்​டில் நடை​பெற்ற அமெரிக்க ஓபன் இறு​திச் சுற்று வரை முன்​னேறிய ஜிவேரேவ், ஆஸ்​திரிய வீரர் டோமினிக் தீமிடம் தோல்வி கண்​டிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மாயா ஜோடி தோல்வி

அமெரிக்க ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் ஜூனியர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் மாயா ராஜேஷ்வரன் ரேவ​தி, உக்​ரைனின் அன்​டோனியா சுஷ்கோவா ஜோடி தோல்வி கண்​டது.

நேற்று நடை​பெற்ற ஜூனியர் மகளிர் இரட்​டையர் அரை இறு​திப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் அன்​னிக்​கா, கிறிஸ்​டினா பெனிக்​கோவா ஜோடி 7-6(2), 6-2 என்ற செட் கணக்​கில மாயா, அன்​டோனியா ஜோடியை வீழ்த்​தி​யது.

SCROLL FOR NEXT