அபிஷேக் சர்மா

 
விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம்

செய்திப்பிரிவு

துபாய்: சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க பேட்​ஸ்மேனான அபிஷேக் சர்மா மீண்​டும் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளார்.

நியூஸிலாந்​துக்கு எதிராக வெலிங்​டனில் நடை​பெற்ற 3-வது டி20 போட்​டி​யில் அபிஷேக் சர்மா 38 பந்​துகளில் 113 ரன்​கள் விளாசி​யிருந்​தார். இந்த அதிரடி சதத்​தின் மூலம், சக வீரரான இஷான் கிஷனை பின்​னுக்​குத் தள்ளி 897 புள்​ளி​களு​டன் அபிஷேக் சர்மா முதலிடத்​துக்கு முன்​னேறினார்.

பாகிஸ்​தான் வீரர் சாஹிப்​சாதா ஃபர்​ஹான் 883 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​திலும், இஷான் கிஷன் 866 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​திலும் உள்​ளனர்.

இந்​திய டி20 அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 5 இடங்​கள் சரிந்து 758 புள்​ளி​களு​டன் 9-வது இடத்​தைப் பிடித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT