விளையாட்டு

இறுதி சுற்றில் அபய் சிங் - வேலவன் ஜோடி

செய்திப்பிரிவு

சென்னை: 3-வது ஹெச்​சிஎல் தேசிய இரட்​டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்​னை​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரிவு அரை இறுதி சுற்​றில் நடப்பு சாம்பியனான அபய் சிங், வேல​வன் செந்​தில் குமார் ஜோடி 11-1, 11-6 என்ற செட் கணக்​கில் ரவி தீட்​சித் - விகாஸ் மெஹ்ரா ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்​டிக்கு முன்​னேறியது.

கலப்பு இரட்​டையர் பிரிவு அரை இறு​தி​யில் வேல​வன் செந்​தில் குமார், ஜோஷ்னா சின்​னப்பா ஜோடி 11-6, 11-9 என்ற செட் கணக்கில் ராகுல் பாய்​தா, அங்​கிதா துபே ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்​டிக்கு முன்​னேறியது. இறு​திப் போட்​டி​யில் வேல​வன் செந்​தில் குமார், ஜோஷ்னா சின்​னப்பா ஜோடி, அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. அபய் சிங் - ராதிகா சீலன் ஜோடி அரை இறு​தி​யில் 12-10, 11-7 என்ற செட் கணக்​கில் சுராஜ் குமார் சந்த், நிருபமா துபே ஜோடியை தோற்கடித்​தது.

SCROLL FOR NEXT