சென்னை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில 15 வயதுக்குட்பட்டோருக்கான தரவரிசை பாட்மிண்டன் போட்டியில் அப்துல்லா சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அப்துல்லா, கே. செல்வமதனை வீழ்த்தி தங்கம் வென்றார். மேலும் சி.சி. சென்னிலாவுடன் இணைந்து 15 வயதுக்குட்பட்டோர் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அப்துல்லா தங்கத்தைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில 19 வயதுக்குபட்டோருக்கான பாட்மிண்டன் போட்டியின் சிறுவர் பிரிவில் ஜே.டி. சச்சின் தங்கம் வென்றார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற யோனக்ஸ் சன்ரைஸ் கேரள 15 வயதுக்குபட்டோருக்கான பாட்மிண்டன் போட்டியில் சிறுவர் (15 வயதுக்குட்பட்டோர்) பிரிவில் ஸ்ரீஸ்வர் ஷிஜோ தங்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் தன்யா அபிகெயில், ஆதித்ரி கண்ணன் வெள்ளியும், 15 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் தன்யா அபிகெயில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இவர்கள் அனைவரும் ஹாட்சன் பாட்மிண்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.