சாய் சுதர்ஷன்

 
விளையாட்டு

அடுத்தடுத்த ஐபிஎல் சீசன்களில் 600+ ரன்கள் குவிப்பு: கோலி வரிசையில் இணைந்த சாய் சுதர்ஷன்

வேட்டையன்

அகமதாபாத்: அடுத்தடுத்த ஐபிஎல் சீசன்களில் 600+ ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன். இதன் மூலம் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அங்கம் வகிக்கும் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

24 வயதான சாய் சுதர்ஷன், தமிழகத்தை சேர்ந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2022 சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வரும் அவர், இதுவரை 2,431 ரன்கள் சேர்த்துள்ளார்.

நடப்பு சீசனில் 14 இன்னிங்ஸில் 638 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் அவரது பேட்டிங் சராசரி 49.08 ஆக உள்ளது. அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் முன்பை காட்டிலும் இந்த சீசனில் உயர்ந்துள்ளது. கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் 759 ரன்கள் அவர் குவித்திருந்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களில் 600+ ரன்களை குவித்த வீரர் ஆகியுள்ளார் சாய் சுதர்ஷன். அதோடு விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் அங்கம் வகிக்கும் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த சீசன்களில் 600+ ரன்கள் குவித்த வீரர்கள் யார், யார்?

>>கிறிஸ் கெயில் - 2011, 2012, 2013

>>டேவிட் வார்னர் - 2016, 2017, 2018

>>கே.எல்.ராகுல் - 2020, 2021, 2022

>>விராட் கோலி - 2023, 2024, 2025

>>ஷுப்மன் கில் - 2025, 2026

>>சாய் சுதர்ஷன் - 2025, 2026

SCROLL FOR NEXT