

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ஹெச்எம்டி வைப்2 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் (சுருக்கமாக ஹெச்எம்டி) நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி செய்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2016 முதல் நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வந்தது இந்த நிறுவனம்.
கடந்த சில ஆண்டுகளாக ஹெச்எம்டி நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஹெச்எம்டி நிறுவனம் ‘வைப்2 5ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனை இப்போதைக்கு ஆன்லைன் மூலம் பெற முடியும்.
ஹெச்எம்டி வைப்2 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>>6.75 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
>>Unisoc T8200 சிப்செட்
>>ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>>4ஜிபி ரேம்
>>64ஜிபி, 128ஜிபி ஸ்டோரேஜ்
>>பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>>8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>>6000mAh பேட்டரி
>>18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>>5ஜி நெட்வொர்க்
>>யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>>இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது