கோப்புப்படம்

 
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 492 பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி வரும் செப்​டம்​பர் 19 முதல் அக்​டோபர் 4 வரை ஜப்​பானில் உள்ள ஐச்​சி-​நாகோயா நகரில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்தத் தொடரில் 492 வீரர், வீராங்​க​னை​கள் அடங்​கிய குழு கலந்​து​கொள்ள மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்கி உள்​ளது.

இதில் 265 வீரர்​களும், 227 வீராங்​க​னை​களும் இடம் பெற்​றுள்​ளனர். அதி​கபட்​ச​மாக தடகளத்​தில் 73 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் நட்​சத்​திரம் நீரஜ் சோப்​ரா, நீளம் தாண்​டு​தல் வீரர் முரளி சங்​கர், நீண்ட தூர ஓட்​டப் பந்தய வீரர் குல்​வீர் சிங், டெகத்​லான் வீரர் தேஜஸ்​வின் சங்​கர், 100 மீட்​டர் தடை தாண்​டு​தல் ஓட்ட வீராங்​கனை ஜோதி யாராஜி ஆகியோர் முதன்மை வீரர்​களாக களம் காண்​கின்​றனர்.

20 பேரை உள்​ளடக்​கிய பாட்​மிண்​டன் அணி​யில் பி.​வி.சிந்​து, ஆயுஷ் ஷெட்​டி, லக் ஷ்யா சென் போன்ற முன்​னணி நட்​சத்​திரங்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். சமீபத்​தில் காமன்​வெல்த் போட்​டிகளில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற லவ்​லினா போர்​கோஹெய்ன் (75 கிலோ), நரேந்​தர் பெர்​வால் (+90 கிலோ), ஜது மணி சிங் (55 கிலோ) உட்பட 11 வீரர்​கள் குத்​துச்​சண்டை பிரி​வில் இடம்​பெற்​றுள்​ளனர்.

SCROLL FOR NEXT