அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு சிஎஸ்கே அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 2-வது முறையாக இதேபோன்று செயல்பட்டதால் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விளையாடும் லெவன் மற்றும் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் இறங்கிய வீரருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.