விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர்: தொடக்க ஆட்டத்தில் ஜன.9-ல் மும்பை - பெங்களூரு மோதல்

செய்திப்பிரிவு

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்​கெட் தொடரின் 4-வது சீசன் 2026-ம் ஆண்டு ஜனவரி 9 முதல் பிப்​ர​வரி வரை நவி மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானம் மற்​றும் வதோத​ரா​வில் உள்ள கோடாம்பி மைதானம் ஆகிய​வற்​றில் நடை​பெறுகிறது.

இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்​படி 28 நாட்​களில் 22 போட்​டிகள் நடைபெறுகின்​றன.

ஜனவரி 9-ம் தேதி நவி மும்​பை​யில் நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஹர்​மன் ​பிரீத் கவுர் தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி, 2024-ம் ஆண்டு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணியுடன் மோதுகிறது. டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் 11 ஆட்டங்​கள் நடை​பெறுகின்​றன. இதில் ஜனவரி 10 மற்​றும் 17-ம் தேதி​களில் ஒரே நாளில் நடை​பெறும் இரு ஆட்​டங்​களும் அடங்கும்.

மீதம் உள்ள 10 ஆட்​டங்​களும் வதோத​ரா​வில் நடை​பெறுகிறது. எலிமினேட்​டர் ஆட்​டம் பிப்​ர​வரி 3-ம் தேதி​யும், இறு​திப் போட்டி 5-ம் தேதியும் நடை​பெறுகின்​றன. தொடரில் கலந்​து​கொண்​டுள்ள 5 அணி​களும் ரவுண்ட் ராபின் அடிப்​படை​யில் தலா இரு முறை நேருக்கு நேர் மோதும்.

லீக் சுற்​றில் முதலிடம் பிடிக்​கும் அணி இறு​திப் போட்​டிக்கு நேரடி​யாக தகுதி பெறும். 3-வது மற்​றும் 4-வது இடத்தை பிடிக்​கும் அணி​கள் எலி மினேட்​டர் ஆட்​டத்​தில் பலப்​பரீட்சை நடத்​தும்.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணி​யாக இறு​திப் போட்​டி​யில் கால்​ப​திக்​கும். மகளிர் பிரீமியர் லீக்​கில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 2 முறை பட்​டம் வென்றுள்​ளது.

ராயல் சாலஞ்​சர்ஸ் அணி 2024-ல் வாகை சூடி​யிருந்​தது. டெல்லி அணி 3 சீசனிலும் இறு​திப் போட்டி வரை முன்​னேறி​யிருந்​தது. குஜ​ராத் ஜெயண்ட்​ஸ், யுபி வாரியர்​ஸ் அணி​கள் இது​வரை இறு​திப்​ போட்​டிக்​கு முன்னேறியது இல்​லை.

SCROLL FOR NEXT