அகமதாபாத் விமான நிலையத்தில் பாபர் அஸம் 
விளையாட்டு

ODI WC 2023 | அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணி!

செய்திப்பிரிவு

அகமதாபாத்: வரும் சனிக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

பாகிஸ்தான் அணி, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் விளையாட அகமதாபாத் நகருக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்திய அணியும் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் நகரில் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் மற்றும் விமான சேவை கட்டணம் போன்றவை இந்த போட்டியை சார்ந்து பல மடங்கு ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT