ஆன்மிகம்

மார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்

செய்திப்பிரிவு

திருமலை: திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதனையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை 17-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டு, 12 மணிக்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

          

அதன் பின்னர் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் ‘உகாதி பச்சடி’ வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 27-ம் தேதி ராம நவமியையொட்டி, திருமலை கருடாழ்வார் சன்னதி அருகே ராம நவமி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோயிலில் 3 ஆஸ்தானங்கள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT