ஆன்மிகம்

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: இந்து தர்​மார்த்த சமிதி டிரஸ்ட் சார்​பில் திருப்பதி திருக்​குடை ஊர்​வலம் சென்னை பூக்​கடை சென்ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் இருந்து நாளை தொடங்​கு​கிறது.

இதுகுறித்து டிரஸ்ட் அறங்​காவலர் ஆர்​.ஆர்​.கோ​பால்ஜி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: திரு​மலை திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ காலத்​தில் கருட சேவைக்​காக, தமிழகத்​தில் இருந்து ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் மலர் மாலை, வெண்​பட்டு திருக்​குடைகள் சமர்ப்​பிக்​கப்​படும்.

இந்து தர்​மார்த்த சமிதி டிரஸ்ட் ஆண்​டு​தோறும் தமிழக மக்​கள் சார்​பில் திரு​மலை வெங்​கடேசப் பெரு​மாளுக்கு 11 அழகிய வெண்​பட்டு திருக்​குடைகளை சென்​னை​யில் இருந்து ஊர்​வல​மாக எடுத்து சென்று சமர்ப்​பணம் செய்து வரு​கிறது.

அந்த வகை​யில், இந்த ஆண்டு திருப்​பதி திருக்​குடை ஊர்​வலம் சென்னை பூக்​கடை சென்ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் இருந்து செப்​டம்​பர் 13-ம் தேதி(​நாளை) காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. தொடர்ந்​து, என்​எஸ்சி போஸ் சாலை, கோவிந்​தப்ப நாயக்​கன் தெரு சந்​திப்​பு, பைராகி மடம், வால்​டாக்ஸ் சாலை வழி​யாக நடை​பெறும் ஊர்​வலம் மாலை 4 மணிக்கு கவுனி தாண்​டு​கிறது. இரவு அயனாவரம் காசி விஸ்​வ​நாதர் கோயிலை சென்​றடைகிறது.

அங்​கிருந்து வில்​லி​வாக்​கம், திரு​முல்​லை​வாயல், பட்​டாபி​ராம், திரு​வள்​ளூர் வழி​யாக செல்​லும் திருக்​குடைகள் 18-ம் தேதி காலை திரு​மலை சென்​றடை​யும். அங்கு மாட​வீ​தி​யில் வலம்​வந்​து, வஸ்​திரம் மற்​றும் மங்​கலப் பொருட்​களு​டன் திருப்​பதி ஜீயர்​கள் முன்​னிலை​யில் தேவஸ்​தான அதி​காரி​களிடம் திருக்​குடைகள் சமர்ப்​பிக்​கப்​படு​கின்​றன. ஊர்​வலம் செல்​லும் வழி​யில் வசிக்​கும் மக்​கள், பக்​தர்​கள் குடும்​பத்​துடன் வந்து திருக்​குடைகளை தரிசிக்க வேண்​டும்.

ஊர்​வலத்​தின்​போது யாரும் திருக்​குடைகள் மீது நாண​யங்​களை வீசுவதோ, காணிக்​கைகள் செலுத்​து​வதோ கூடாது. திருப்​பதி திருக்​குடை தொடர்​பாக நன்​கொடைகள் வாங்​கப்​ப​டாது. எனவே, யாரிட​மும் எவ்​வித கட்​ட​ண​மும் செலுத்த வேண்​டாம். மேலும் விவரங்​களுக்கு 73730 99562, 73730 99563 என்ற எண்​களில்​ தொடர்​பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

​திருப்​பதி திருக்​குடை பாத​யாத்​திரை​யையொட்டி வால்​டாக்ஸ் சாலை, என்​எஸ்சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்​றும் அதன் இணைப்பு சாலைகள், சூளை ரவுண்​டா​னா, டெமலாஸ் சாலை உள்​ளிட்ட பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்பட உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT