ஆன்மிகம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நாளை இரவு முழுவதும் நடை திறப்பு

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்​டு, ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நாளை (பிப். 15) இரவு முழு​வதும் நடை திறக்​கப்​பட்​டிருக்​கும். நாளை மறு​நாள் தேரோட்​டம் நடை​பெறுகிறது.

ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நடை​பெறும் முக்​கிய​மான திரு​விழாக்​களில் ஒன்​றான மாசி மகா சிவ​ராத்​திரி விழா, கடந்த பிப். 8-ல் தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்​கள் நடை​பெறுகிறது.

          

விழா​வின் 8-ம் நாளான மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு நாளை காலை 9 மணி​யள​வில் நடராஜர் கேட​யத்​தில் எழுந்​தருளுதல், கோயில் அனுப்பு மண்​டபத்​தில் பட்​ட​யம் வாசித்​தல் நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

நாளை இரவு 9 மணிக்கு ஒளி வழி​பாடு முடிந்​ததும், ராம​நாத சுவாமி, பர்​வதவர்த்​தினி அம்​பாள் மின்​னொளி​யால் அலங்​கரிக்​கப்​பட்ட வெள்ளி ரதத்​தில் வீதி​யுலா செல்​கின்​றனர். மேலும், மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு கோயில் நடை இரவு முழு​வதும் திறக்​கப்​பட்​டிருக்​கும்.

வரும் 16-ம் தேதி காலை 10 மணி​யள​வில் ராம​நாத சுவாமி, பர்​வதவர்த்​தினி அம்​பாள் தேரோட்​டம் நடை​பெறும். வரும் 17-ம் தேதி மாசி அமா​வாசையை முன்​னிட்டு அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் தீர்த்​த​வாரி நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

திரு​விழாவை முன்​னிட்​டு, தின​மும் தெற்கு நந்​தவன திருக்​கல்​யாண மண்​டபத்​தில் ஆன்​மிகச் சொற்​பொழிவு மற்​றும் இசை நிகழ்ச்​சிகளும் நடை​பெறுகின்​றன.

SCROLL FOR NEXT