அமித் ஷா திருச்சி வருகை: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

அமித் ஷா திருச்சி வருகை: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
Updated on
1 min read

திருச்சி: மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று இரவு திருச்சி வந்​தார். பின்னர் அவர் பாஜக முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா நேற்று இரவு டெல்​லி​யில் இருந்து தனி விமானத்​தில் புறப்​பட்​டு, இரவு திருச்சி விமான நிலை​யம் வந்​தடைந்​தார். அங்கு அவருக்கு கட்சி நிர்​வாகி​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

பின்​னர், அங்​கிருந்து கார் மூலம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கே​யுள்ள தனி​யார் ஓட்​டலுக்கு வந்​தார். அங்கு நடை​பெற்ற பாஜக மையக் குழுக் கூட்​டத்​தில்.

தமிழக அரசி​யல் நில​வரம், தொகு​திப் பங்​கீடு, தேர்​தல் பிரச்​சார யுக்​தி​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து மத்​திய அமைச்​சரும், தமிழக தேர்​தல் பொறுப்​பாள​ரான பியூஷ் கோயல், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக மேலிடப் பார்​வை​யாளர்​கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்​றும் மூத்த தலை​வர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

இன்று (பிப்​.14) காலை 10.30 மணிக்கு ஓட்​டலில் இருந்து விமானம் நிலை​யம் செல்​லும் அமித் ஷா, அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் காரைக்​கால் செல்​கிறார்.

அங்கு நடை​பெறும் பாஜக பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் அவர், தொடர்ந்து புதுச்​சேரி மாநில பூத் கமிட்டி நிர்​வாகி​களு​டன் தேர்​தல் பணி​கள் குறித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

பின்​னர் அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் கிளம்பி மாலை 5.30 மணிக்கு திருச்சி வருகை தரும் அமித் ஷா, திருச்சி விமான நிலை​யத்​தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார்​.

அமித் ஷா திருச்சி வருகை: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை
“திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” - விஜய் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in