ஆன்மிகம்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நாளை பங்குனி திருவிழா தேரோட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பங்​குனி திரு​விழாவை முன்​னிட்டு திருவான்மியூர் மருந்​தீஸ்​வரர் கோயி​லில் நாளை தேரோட்​டம் நடை​பெறுகிறது. சென்​னை​யில் பழமை வாய்ந்த கோயில்​களில் ஒன்​றாக திரு​வான்​மியூர் திரிபுர சுந்​தரி அம்​பாள் உடனுறை மருந்​தீஸ்​வரர் கோயில் திகழ்​கிறது.

இக்​கோயி​லில் ஆண்​டு​தோறும் பங்​குனித் திரு​விழா 11 நாட்​கள் வெகு விமரி​சை​யாக நடை​பெறும். அந்​த வகை​யில் இந்​தாண்டு பங்​குனி திரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

          

தொடர்ந்​து, சூரியபிரபை, சந்​திரபிரபை, தியாக​ராஜர் வீதி உலா நடை​பெற்​றது. 25-ம் தேதி அதி​கார நந்தி சேவை, பூத வாக​னம், திருபவனி, நடை​பெற்​றது.

தொடர்ந்​து, புருஷா மிருக வாக​னம், நாக வாக​னம் வீதி உலா​வும், நேற்று காலை தொட்டி விழா, பஞ்​சமூர்த்​தி​கள் வீதி உலா​வும் நடை​பெற்​றது. இன்று யானை வாகன பவனி நடக்​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நாளை (29-ம் தேதி) காலை 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரவு 1 மணிக்கு தியாக​ராஜர் வீதி உலா நடக்​கிறது. 30-ம் தேதி பரிவேட்டை விழா​வும், 31-ம் தேதி திருக்​கல்​யாண உற்​சவ​மும் நடக்​கின்றன.

11-ம் நாள் விழா​வான ஏப்​.2-ம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப விழா​வும், அதைத்​தொடர்ந்து வெள்​ளி​யங்​கிரி விமானத்​தில் வீதி உலா​வும் நடை​பெறுகிறது.

இதே​போல், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனி பெரு​விழாவை முன்​னிட்​டு, நாளை (29-ம் தேதி) தேரோட்​ட​மும், 30-ம் தேதி அறு​பத்து மூவர் விழா​வும், ஏப்​.1-ம் தேதி திருக்​கல்​யாண உற்​சவ​மும் நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT