சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக சரண கோஷங்கள் முழங்க சந்நிதானத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கி.

 
ஆன்மிகம்

சபரிமலையில் இன்று மண்டல பூஜை: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வழிபாடு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலையில் மண்டல பூஜை​யின் உச்ச நிகழ்​வாக இன்று (டிச. 27) ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணி​வித்து சிறப்பு வழி​பாடு நடை​பெற உள்​ளது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் கடந்த நவ. 16-ம் தேதி மண்டல வழி​பாட்​டுக்​காக நடை​திறக்​கப்​பட்​டது.

41 நாள் வழி​பாட்​டின் உச்ச நிகழ்​வாக இன்று மண்டல பூஜை நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, சுவாமிக்கு 420 பவுன் எடையி​லான தங்​கக் கவச அங்கி அணிவிக்​கப்​பட்டு சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற உள்ளன.

கடந்த 23-ம் தேதி ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து தங்க அங்கி ஊர்​வல​மாக கொண்​டு​வரப்​பட்​டது. நேற்று மதி​யம் பம்​பையை வந்​தடைந்த தங்க அங்​கி, பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது. பின்​னர் தலைச்​சுமை​யாக நீலிமலை வழியாக கொண்டு செல்​லப்​பட்ட தங்க அங்​கிக்​கு, தேவசம் போர்டு சார்​பில் சரங்​குத்​தி​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

பின்​னர் தங்க அங்​கியை தந்​திரி மகேஷ் மோக​னரரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி ஆகியோர் பெற்​றுக் கொண்​டனர். தொடர்ந்து 18-ம் படி வழியே கொண்டு செல்​லப்​பட்​டு, மாலை​யில் ஐயப்​பனுக்கு அணிவிக்​கப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது.

இரவு 10.45 மணி வரை ஏராள​மான பக்​தர்​கள் தங்​கத்​தில் ஜொலித்த ஐயப்​பனை தரிசனம் செய்​தனர். பின்பு அங்கி அகற்​றப்​பட்டு 11 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், இன்று நடை​பெறும் மண்டல பூஜையை முன்​னிட்டு அதி​காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, பல்​வேறு பூஜைகள் நடத்​தப்​படு​கின்​றன.

காலை 10.10 முதல் 11.30 மணிக்​குள் தங்க அங்கி அணிவிக்​கப்​பட்டு தீபா​ராதனை நடை​பெறும். இரவு 11 மணிக்கு நடை சாத்​தப்​படும். இத்​துடன் மண்டல பூஜை வழி​பாடு​கள் நிறைவடைய உள்​ளன. 28, 29-ம் தேதி​களில் சந்​நி​தானம் சுத்​தம் செய்​யப்​பட்​டு, மகர வழி​பாட்​டுக்​காக வரும் 30-ம் தேதி மாலை​யில் கோயில் நடை திறக்​கப்​படும் என்று தேவசம் போர்டு அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT