மகரஜோதி திரு​விழாவை முன்​னிட்டு சபரிமலை​யில் செய்​யப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்த சந்​நி​தான காவல் துறை சிறப்பு அதி​காரி சுஜித்​தாஸ்​.

 
ஆன்மிகம்

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பிரசித்தி பெற்ற மகரஜோதி பூஜை இன்று (டிச. 14) கோலாகல​மாக நடை​பெற உள்​ளது. மகரஜோ​தியை முன்​னிட்டு ஐயப்ப சுவாமிக்கு இன்று பாரம்​பரிய ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டு, சிறப்பு தீபா​ராதனை உள்​ளிட்ட பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற உள்​ளன.

இதற்​கான திரு​வாபரணங்​கள் பந்​தளத்​தில் இருந்து நேற்று முன்​தினம் புறப்​பட்​டன. இந்த ஊர்​வலம் லாகா வனத்​துறை சத்​திரம், பிலாப்​பள்​ளி, அட்​டதோடு, வலி​யான வட்​டம், நீலிமலையை கடந்து சரங்​குத்தி வழியே இன்று மாலை 5.30 மணிக்கு சந்​நி​தானத்தை வந்​தடை​யும்.

தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் வரவேற்பு அளிக்க உள்​ளனர். பின்பு மங்கல வாத்​தி​யங்​கள் முழங்க 18-ம் படி வழியே திரு ஆபரணப்​பெட்டி கொண்டு செல்​லப்​பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்​பனுக்கு அணிவிக்​கப்​படும். தொடர்ந்​து, பொன்​னம்​பலமேட்​டில் தெரி​யும் ஜோதியை பக்​தர்​கள் தரிசிப்​பர். இதற்​காக சந்​நி​தானத்​தில் 14 இடங்​கள் அடை​யாளப்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

இதே​போல, வண்​டிப்​பெரி​யாறு, புல்​மேடு, பஞ்​சாலிமேடு, சத்​திரம், பருந்​தும்​பாறை, அய்​யன்​மலை, பஞ்​சு​பாறை, இலவுங்​கல், அட்​டத்​தோடு, நீலிமலை உள்​ளிட்ட பல பகு​தி​களில் இருந்​த​படி பொன்​னம்​பலமேட்​டில் தெரி​யும் ஜோதியை தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. அங்​கீகரிக்​கப்​பட்ட வியூ பாயின்​டு​களில் மட்​டும் பக்​தர்​கள் மகரஜோ​தியை தரிசிக்​கலாம்.

மகரஜோ​தியை ஆண்​டுக்கு ஒரு​முறை குறிப்​பிட்ட நிமிடங்​கள் வரையே தரிசனம் செய்ய முடி​யும் என்​ப​தால், பக்​தர்​கள் வனப்​பகு​தி​களில் முகாமிட்டு வரு​கின்​றனர். இதையொட்டி காவல் மற்​றும் வனத் துறை​யினர் பலத்த பாது​காப்பு மற்​றும் மருத்​துவ வசதி​களுக்கு ஏற்​பாடு செய்​துள்​ளனர். இது தொடர்​பாக மலைப் பகு​தி​களில் நேற்று அதி​காரி​கள் ஆய்​வுப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

புல்​மேட்​டில் கட்​டுப்​பாடு:

இரவு நேரத்​தில் வன விலங்​கு​கள் நடமாட்​டத்தை கருத்​தில்​கொண்​டு, புல்​மேட்​டில் மகரஜோ​தியை தரிசித்த பிறகு தொடர்ந்து இந்த வழித்​தடத்​தில் சந்​நி​தானம் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

புல்​மேட்​டில் இருந்து சத்​திரம் அல்​லது வல்​லக்​கடவு வழி​யாகச் சென்​று, அதன் பிறகே சந்​நி​தானத்​துக்கு செல்ல வேண்​டும் என்று வனத் துறை வலி​யுறுத்​தி​யுள்​ளது. சபரிமலை​யின் பல்​வேறு பகு​தி​களி​லும் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT