ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று வழங்கப்பட்ட வஸ்திர பகுமானங்களை பெற்றுக் கொண்ட இணை ஆணையர் பிரகாஷ்.

 
ஆன்மிகம்

கைசிக ஏகாதசி: திருப்பதி கோயில் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வஸ்திர பகுமான மரியாதை

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்​கம் கோயிலுக்கு திருப்​பதி திரு​மலை வெங்​கடாஜலபதி கோயில் சார்​பில் வஸ்திர பகுமான மரியாதைகள் நேற்று வழங்​கப்​பட்​டன.

பூலோக வைகுண்​டம் என அழைக்​கப்​படும் ஸ்ரீரங்​கம் ரங்​கநாதர் கோயிலுக்​கும், திருப்​பதி திரு​மலை வெங்​கடாஜலபதி கோயிலுக்​கும் இடையே பாரம்​பரிய தொடர்பு உள்​ளது. அந்த வகை​யில், ஸ்ரீரங்​கம் கோயி​லில் உள்ள நம்​பெரு​மாள், திருப்​ப​தி​யில் 40 ஆண்​டுகளாக பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டிருந்​தார். எனவே, 2 வைணவ கோயில்​களுக்​கும் இடையே உள்ள புனிதத் தொடர்பை போற்​றும் வகை​யில் வஸ்திர பகுமான மரியாதை தொன்​றுதொட்டு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, கைசிக ஏகாதசி​யையொட்டி திருப்​பதி திரு​மலை தேவஸ்தானம் சார்​பில், ஸ்ரீரங்​கம் மூல​வர் பெரிய பெரு​மாள், உற்​சவர் நம்​பெரு​மாள், தாயார் ரங்​கநாச்​சி​யார், உடைய​வர் ராமானுஜர் ஆகியோ​ருக்கு ரங்​க​வி​லாச மண்​டபத்​தில் நேற்று பட்டு வஸ்திரங்​கள், பட்​டுப் புட​வை​கள், குடைகள், பூமாலைகள், பழவகைகள் உள்​ளிட்​டவை வஸ்திர பகுமான மரியாதையாக சமர்ப்​பிக்​கப்​பட்​டன.

அங்​கிருந்து மேள​தாளங்​கள் முழங்க கோயில் யானை மீது ஊர்​வலமாக சென்று திரும்​பிய வஸ்திர பகுமானங்​களை திரு​மலை திருப்​பதி தேவஸ்தான நிர்​வாக அதி​காரி எம்.ரவிச்​சந்​திரன் வழங்க, ஸ்ரீரங்​கம் கோயில் இணை ஆணை​யர் பிரகாஷ் பெற்​றுக்​கொண்​டார். இந்​நிகழ்​வில் திருப்​பதி தேவஸ்தான நகை பொறுப்​பாளர் குருராஜகன், ஸ்ரீரங்​கம் கோயில் அர்ச்​சகர் சுந்​தர் பட்​டர் உள்​ளிட்ட கோயில் பணி​யாளர்​கள், பக்​தர்​கள் பங்​கேற்றனர்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று வழங்கப்பட்ட வஸ்திர பகுமானங்களை பெற்றுக் கொண்ட இணை ஆணையர் பிரகாஷ்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT