ஆன்மிகம்

ஏழுமலையான் கோயிலில் 10 நாளில் ரூ.41 கோடி காணிக்கை

7.38 லட்சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம்

என்.மகேஷ்குமார்

திருமலை: ​திருப்​பதி திரு​மலை​யில் உள்ள அன்​னமய்யா பவனில் நேற்று தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் மற்​றும் கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கய்ய சவுத்ரி ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் பேசி​ய​தாவது: கடந்த டிச. 30-ம் தேதி முதல் ஜன. 8-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி​யையொட்டி சொர்க்க வாசல் தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. ஒருங்​கிணைப்பு கட்​டுப்​பாட்டு அறை மூலம் 24 மணி நேர​மும் ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் பக்​தர்​களின் கூட்​டத்தை கண்​காணித்து அதற்கு தகுந்​தது போல் தரிசன ஏற்​பாடு​களை செய்​தோம்.

கடந்த ஆண்டு 6.83 லட்​சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்த நிலை​யில், இம்​முறை 7.38 லட்​சம் பேர் சொர்க்க வாசல் தரிசனம் செய்​தனர். கடந்த 10 நாட்​களில் 182 மணி நேர தரிசன வேளை​யில், 164 மணி நேரம் சாமானிய பக்​தர்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டது. அந்த 10 நாட்​களில் உண்​டியலில் ரூ.41.14 கோடி காணிக்கை செலுத்​தப்​பட்​டுள்​ளது. 44 லட்​சம் லட்டு பிர​சாதம் விற்​பனை​யாகி உள்​ளன. இது கடந்த ஆண்டை விட 10 லட்​சம் லட்​டு​கள் அதி​கம். 10 நாட்​களில் 33 லட்​சம் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT