ஆன்மிகம்

நவம்பர் மாத ஏழுமலையான் தரிசனம்: ஆன்லைனில் இன்று டிக்கெட்

என். மகேஷ்குமார்

திருமலை: வரும் நவம்​பர் மாதத்​தில் திருப்பதி ஏழு​மலை​யானை தரிசிப்​ப​தற்​கான பல்​வேறு ஆர்​ஜித சேவை​கள், சிறப்பு தரிசன டிக்கெட்​டு​கள் மற்​றும் தங்​கும் அறை​களுக்​கான ஆன்​லைன் டிக்கெட்டு​களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் தனது அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் வெளி​யிடு​கிறது.

இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் சுப்​ர​பாதம், தோமாலை சேவை, அர்ச்​சனை, அஷ்டதள பாத பத்​மா​ராதனை போன்ற ஆர்​ஜித சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

தொடர்ந்​து, 21-ம் தேதி புதன்​கிழமை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவைகளுக்கான டிக்கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

24-ம் தேதி காலை 10 மணிக்கு இலவச​மாக அங்​கபிரதட்சண டோக்​கன்​களும், 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்​கட்​டளைக்​கான டிக்கெட்​டு​களும், இதே நாள் மதி​யம் 3 மணிக்கு மாற்று திற​னாளி பக்​தர்​கள் மற்​றும் மூத்த குடிமகன்​களுக்​கான டிக்கெட்டுகளையும் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

இம்​மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நவம்​பர் மாதத்​திற்​கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். இவை அனைத்​தும் ttdevasthanams.ap.gov.in என்ற இணைய தளத்​தில் பக்​தர்​கள்​ முன்​ப​திவு செய்​து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT