திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான. திருவாதிரை திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் நடராஜ பெருமான் எழுந் தருளினார். பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், பன் னீர்,இளநீர்,மாதுளை, திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட ஆருத்ரா மகா அபிஷேகம் அதிகாலை வரை நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், பகல் 1 மணிக்கு அனுக்கிரக தரிசனமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
செங்கை மாவட்டம்: திருக்கழுகுன்றம் நகரில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக் கோயில் எனப்படும் பக்தவச் சலேஸ்வரர் கோயிலில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளான நேற்று முன்தினம் இரவு ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுவாமிக்கு பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், மலர் அலங்காரத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள், நடராஜர் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, ரிஷப தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனுபுரீஸ்வரர் கோயிலில்..: இதேபோல், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடராஜப்பெருமானுக்குபால். தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபி ஷேகம், தீப ஆராதனையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடராஜ பெருமானை வழிபட்டனர்.
மேலும், மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில் நேற்று ஆருத்ரா தரிசனம் சிறப்பு அபிஷேகம், சுவாமி உட்பிரகார உற் சவம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பக்தர்களுக்கு திருவாதிரை களி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.