சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூர் செல்வ விநாயகர் நேற்று 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
ஆன்மிகம்

திருப்பந்தியூர் செல்வ விநாயகருக்கு 18 ஆயிரம் கடலை உருண்டை அலங்காரம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திரு​வள்​ளூர் அருகே திருப்​பந்​தி​யூரில் உள்ள செல்வ விநாயகர் கோயி​லில் சங்​கடஹர சதுர்த்​தியை முன்​னிட்​டு, நேற்று செல்​வ வி​நாயகர் 18 ஆயிரம் கடலை உருண்​டைகளால் அலங்​கரிக்​கப்​பட்​டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரு​வள்​ளூர் அருகே உள்ள திருப்​பந்​தி​யூர் கிராமத்​தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் நேற்று ஆனி மாத சங்​கடஹர சதுர்த்​தியை முன்​னிட்டு நேற்று சிறப்பு வழி​பாட்டு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

இதில், நேற்று காலை 9 மணி முதல், இரவு 9.30 மணிவரை செல்​வ ​வி​நாயகர் 18 ஆயிரம் கடலை உருண்​டைகளால் அலங்​கரிக்​கப்​பட்​டு, பக்​தர்​களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 5 மணி​யள​வில் வழித்​துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை திருக்​கயி​லாய வாத்​திய இசை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மூன்று வேளை​யும் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது.

இந்​நிகழ்​வு​களில், திருப்​பந்​தி​யூர், பண்​ணூர், கொட்​டையூர், மப்​பேடு, கீழச்​சேரி, உளுந்​தை, பேரம்​பாக்​கம் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்​.

SCROLL FOR NEXT