ஆன்மிகம்

திருநள்ளாறில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்: தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்

செய்திப்பிரிவு

காரைக்கால்: திருநள்​ளாறு தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் பிரம்​மோற்சவ விழா​வில் தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது.

காரைக்​கால் மாவட்​டம் திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் அமைந்​துள்ள, பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்யேஸ்​வரர் கோயி​லில் பிரம்​மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முக்​கிய நிகழ்​வான 5 தேர்​கள் தேரோட்டம் நேற்று நடை​பெற்​றது.

இதையொட்டி நேற்று முன்​தினம் இரவு செண்பக தியாகராஜர் சுவாமி திருத்​தேருக்கு எழுந்​தருளி​னார். தொடர்ந்து நீலோத் பாலாம்​பாள், விநாயகர், சுப்​பிரமணி​யர், சண்​டிகேஸ்​வரர் ஆகிய சுவாமிகளும் தனித்​தனி தேர்​களில் எழுந்​தருளினர். பின்​னர் தேர்​களுக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டு, மகா தீபா​ராதனைக் காட்​டப்​பட்​டு, நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில் தேரோட்​டம் தொடங்கியது.

திருநள்​ளாறு தொகுதி எம்எல்ஏ ஜி.என்​.எஸ்​.​ராஜசேகரன், மாவட்ட ஆட்​சி​யர் இஷிதா ராட்​டி, நிர்​வாக அதி​காரி (கோ​யில்​கள்) ஆர்​.சுப்​பிரமணி​யன், தரு​மபுரம் ஆதீன கட்​டளை விசா​ரணை மத் சிவகுரு​நாதன் தம்​பி​ரான் சுவாமிகள் மற்​றும் திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

நான்கு வீதி​களை​யும் சுற்றி வந்த தேர்​கள், பின்​னர் மாலை​யில் மீண்​டும் நிலையை வந்​தடைந்​தன. தொடர்ந்து இரவு செண்பக தியாக​ராஜர் சுவாமி எண்​ணெய்க்​கால் மண்​டபத்​துக்கு எழுந்​தருளி​னார். தேரோட்​டத்தை முன்​னிட்டு காரைக்​கால் மாவட்​டத்​துக்கு உள்​ளூர் விடு​முறை அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இன்று (மே 28) இரவு செண்பக தியாக​ராஜர் சுவாமி எண்​ணெய்க்கால் மண்​டபத்​திலிருந்து யதாஸ்தானத்​துக்கு எழுந்​தருளல் மற்​றும் சனீஸ்வர பகவான் தங்க காக வாக​னத்​தில் எழுந்​தருளும் சகோபுர வீதி​யுலா நடை​பெறுகிறது. நாளை இரவு தெப்ப உற்​சவம் நடை​பெற உள்​ளது.

SCROLL FOR NEXT