கோப்புப் படம்
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் உள்ளது.
இங்குள்ள நடராஜர் சந்நிதியில் ஒற்றைப் பச்சை நிறமரகதக் கல்லாலான சிலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் நடைபெறக்கூடிய சந்தனக்காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு விழா வரும் 25-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
ஜன. 2-ம் தேதி மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனக் காப்பு படி களைதல் மற்றும் மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி, ஜன 3-ம் தேதி அதிகாலை புதிய சந்தனம் காப்பிடுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன